2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாணின் நிறையை விழுங்கும் பேக்கரிகள்

Freelancer   / 2022 நவம்பர் 10 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி- மடவளை நகரத்தில் பல கடைகளில் பொதுவாக நிறை குறைந்த பாண்களே விற்கப்படுவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்தாலும் முறையான  நடவடிக்கைகள் எவையும் இதுவரையிலும்  எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இறாத்தல் பாணின் நிறை 350 கிராமாகும். எனினும், மடவள நகரத்திலுள்ள பெரும்பாலான  பேக்கரிகள் மற்றும் கடைகளில் சுமார் 275 முதல் 280 கிராம் வரையான நிறையைக் கொண்ட பாண்களே விற்கப்படுகின்றன. 

குறைந்த நிறையைக் கொண்ட பாணின் நிறையை இலத்திரனியல் தராசு காட்டுகிறது. சுமார் 275 முதல் 280 கிராம் நிறையைக் கொண்ட பாண்கள், 140 ரூபாவுக்கு விற்கப்பட்ட போதும் தமக்குப்  போதுமானதாக இல்லையென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். R

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .