2026 ஜனவரி 21, புதன்கிழமை

பாதை சீர்கேடு; பொதுமக்கள் அவதி

Kogilavani   / 2021 மே 26 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.பாலேந்திரன்

டயகம் ஈஸ்ட் இலக்கம் 3, 15 ஆம் இலக்கப்  பாதை மிக மோசமான நிலையில் காணப்படுவதால் அந்தப் பாதை வழியாகப் போக்குவரத்துச் செய்வதில் பாரிய இடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பாதையானது குன்றும் குழியுமாகக் காணப்படுவதுடன் மழை காரணமாக சேற்றுநீர் நிரம்பிக் காணப்படுவதால், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இப்பகுதி இளைஞர்கள், பாதையில் இருக்கும் குழிகளை இணைந்து தற்காலிகமாக மண் இட்டும் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நீண்டகால தீர்வாக பாதையைப் புனரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X