Editorial / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ப்ரௌன்ஸ்வீக் தோட்ட பால்காமம் பிரிவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பாலகிருஷ்ணன் பழனிவேல், (58 வயது) இன்று (15) மதியம் 1.30 மணியளவில் தனது இல்லத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஆனந்த பத்மஸ்ரீ சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தார். திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வை இட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது என்று தெரிவித்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஆனந்த பத்மஸ்ரீ, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago