2026 மே 06, புதன்கிழமை

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ‘தலைமைகளுக்கு மனமில்லை’

Editorial   / 2019 மே 02 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

இந்த நாட்டில், இனப்பிரச்சினை காலத்துக்குக் காலம் தலைதூக்கி வருவதாகவும் இந்தப் பிரச்சினையை மய்யமாக வைத்துத்தான், அரசியல் நடத்தப்படுவதாகவும் விமர்சித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், எந்தவோர் அரசியல் தலைவருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மனமில்லை என்றும் சாடினார்.   

மலையக மக்கள் முன்னணியின் ஹட்டன் காரியாலத்தில், நேற்று (1) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், உயிர்த்த ஞாயிறன்று, குண்டு வெடிப்பில் உயிர்நீத்த சொந்தங்களுக்கு, மலையக மக்கள் முன்னணி, மேதின அஞ்சலியைச் செலுத்தி இரங்கலைத் தெரிவித்துள்ளது என்றார்.   

இந்நாட்டில், மத ரீதியாக ஒரு சமூகத்தை அழித்துவிட வேண்டும் என்று யாரும் நினைக்கக் கூடாது என்றும் வடக்கு, கிழக்கில் சிறுபான்மை தமிழ் மக்களின் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு முதலான பிரச்சினைகளை முன்வைத்து யுத்தம் நடைபெற்று வந்ததாகவும் ஆனால், முஸ்லிம் மக்களுக்கு, சகல வசதிகளும் இருக்கும் போது, இத்தகைய தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு, நூற்றுக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன என்றும் இனப்பிரச்சினையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் சாடினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .