Freelancer / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட கொட்டம்ப திக்கல கிராம சேவகர் பிரிவில் வசிப்பவர்கள் பயன்படுத்தும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் வீதியை புனரமைப்பதற்கான அக்கறை காட்டவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
வலப்பனை- தெரிப்பெய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டம்ப, வெளிகெட்டிய, உடுகம , திக்கல, உஸ்பனாஎல்ல, மெதிகந்த என ஐந்து கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர், திக்கல கிராமத்தில் சுமார் 18 கோடி ரூபாய் செலவில் குடி நீர் அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்போது இத்திட்டதை மேற்கொண்டவர்கள் கொட்டம்ப சந்தியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்கல கிராம பாடசாலை வரையான பிரதான வீதியை பயன்படுத்தியுள்ளதுடன்,
கட்டுமானத்திற்கான கனரக வாகனங்களில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதால், அவ்வீதி தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.
எனினும் தமது அபிவிருத்தி திட்டத்தின் பின்னர் இவ்வீதியை மீள புனரமைத்து தருவதாக அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்த அதிகாரிகள் திக்கல மக்களுடன் ஒப்பந்தமும் செய்துள்ளனர்.

இந்த திட்டம் தற்போது நிறைவுக்கு வந்து திறப்பு விழா செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் வீதியை புனரமைத்து தருவதாக வழங்கிய வாக்குறுதியை மீறி வீதியை புனரமைக்காது திறப்பு விழாவை நடத்த முற்பட்டதால் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுப்பட்டனர்.
12 minute ago
30 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
5 hours ago