Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்.
பொகவந்தலாவை- கெர்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவரால் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் நேற்று (30) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளரான சாம்பசிவம் சதீஸ்குமாருக்கே இவ்வாறு அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை கெர்கஸ்வோல்ட் தோட்ட நிர்வாகத்தினரால் தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகள், தொழில் உரிமைகள் மீறப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக கெர்கஸ்வோல்ட் மத்திய பிரிவில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்குப் பயன்படுத்தும் நீர்த்தாங்கியை சுத்தம் செய்து தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், இதனை சுத்தம் செய்துத் தரமுடியாது. அதனை சுத்தம் செய்யும் பணிகளுக்கு தோட்ட நிர்வாகத்தின் செலவில் தொழிலாளர்களை வழங்க முடியாது. இது தொடர்போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வருமாக இருந்தால் குறித்த நீர்தாங்கியை மூடிவிடுவேன் என கெர்கஸ்வோல்ட் தோட்ட உதவி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தோட்ட உதவி முகாமையாளருடன் கலந்துரையாடி குறித்த நீர்த்தாங்கியை மூட வேண்டாமென கோரிக்கை விடுப்பதற்காக பொதுமக்கள் சென்றுள்ளனர்.
இதன்போது தோட்ட உதவி முகாமையாளர் ஊடகவியலாளர் சதீஸ்குமார் தொடர்பில் பொதுமக்களிடம் அவரது நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு விடயங்களைக் கூறி, அச்சுறுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago