2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிரைட்வெல் தோட்ட ஆற்றிலிருந்து சடலம் மீட்பு

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 25 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

பொகவந்தலாவை- கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறு ஒன்றில் இருந்து சடலமொன்று இன்று (25) மீட்கப்பட்டுள்ளது என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பிரைட்வெல் தோட்டத்திலிருந்து செல்லும் கிளை ஆற்றில் சடலமொன்றை கண்ட தொழிலாளர்கள், பொகவந்தலாவை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் இவர் கடந்த சில நாட்களாக பொகவந்தலாவை நகரில் இருந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் உயரிழந்தவர் யார் என்பது தொடர்பில் இதுவரை  உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X