2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

புதிய உடற்பயிற்சி நிலையம் திறந்துவைப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 26 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா - கந்தப்பளை நகரில் 79 இலட்சம் ரூபாய் செலவில் கட்டுடல், உடற் பயிற்சி நிலையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சௌபாக்கியா நோக்கு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜியின் வேண்டுகோளுக்கு அமைய, அரசாங்க மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் ஜானகபண்டார தென்னகோன், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேயின் அனுமதியுடன்,தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எம்.ராமேஸ்வரன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த உடல்கட்டு,மற்றும் உடற் பயிற்சி நிலையம் திறப்பு விழா செய்து வைக்கப்பட்டது.

நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட கந்தப்பளை நகரில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தினை மீள் புனர்நிர்மாணம் செய்து அதில் இப்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு உத்தியோகப்பூர்வமாக திறப்புவிழா செய்து வைக்கப்பட்டது.

இதன் போது இடம்பெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன்,மத்திய மாகாண உள்ளூராட்சி சபைகளின் உதவி ஆணையாளர் பிரபாத் காரியவசம்,மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பழனி சக்திவேல், நுவரெலியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி யூ உடுகம சூரிய, கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ராஜாமணி பிரசாத், உட்பட நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலருடன் பொது மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X