Freelancer / 2023 நவம்பர் 16 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளிக்கு பின்னர் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
இதனால் மஸ்கெலியா, சாமிமலை, கிளங்கன் ஆதார வைத்திய சாலைகளில் வெளி நோயாளிகள் பிரிவிலும் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இப் பகுதியில் கனத்த மழை மற்றும் காலை வேளையில் சற்று உஸ்னமான காலநிலை தோன்றியுள்ளது.
இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வாந்தி, வயிற்றுப் போக்கு வைரஸ் காய்ச்சல் தோன்றியுள்ளது.
பொது மக்களை கொதிக்க வைத்து ஆறிய பின் நீரை பருகுமாறும் தேவை அற்ற பலகாரம் சாப்பிட வேண்டாம் எனவும், மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் எனவும்,வெளியே செல்லும் போது சுவிட்டர், தொப்பி அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என மக்களுக்கு அறிவுருத்தல் விடுத்து உள்ளார்.
1 hours ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025