2025 மே 08, வியாழக்கிழமை

புதையல் தோண்டிய பெண்கள் இருவர் உட்பட நால்வர் கைது

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

கிடைத்த தகவலுக்கு  அமைய, கொத்மலை, பிரதேசத்திலுள்ள பழைய கோவிலுக்கு அருகாமையிலுள்ள வனப்பகுதிக்கு திங்கட்கிழமை (11) விரைந்த  விசேட அதிரடிப்படையினர், அங்கு புதையல் தோண்டிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.

அவர்கள், தையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய முள்,மண்வெட்டி, இன்னும்  பல கருவிகள் மற்றும் உபகரணங்களை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்கள்.  ஒருவர் வெல்லாவைச் பகுதியைச் சேர்ந்தவர் ஆவர்.  

சந்தேகநபர்களை   நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த  பூண்டுலோயா  பொலிஸார்,    இது தொடர்பான மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X