R.Maheshwary / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
2018ஆம் ஆண்டு மாவனெல்ல நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள புத்தர் சிலைகளை உடைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 16 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 16 பேரும் இன்று கேகாலை மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜகத் ஏ கஹதகமகே, ஜயகிய டீ அலவிஸ் மற்றும் எஸ்.ஐ. காலிங்க வங்ச ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் வழக்கு விசாரணைகளின் சாட்சியங்களுக்காக மூவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், முறைப்பாட்டு தரப்பு மற்றும் பிரதிவாதிகள் தரப்பால் வழக்கு விசாரணையை பிற்போடுமாறு காரணங்களை முன்வைத்தனர்.
இதனை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் வழக்கை அடுத்த மாதம் 22ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளதுடன், சந்தேகநபர்களின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026