2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

புனரமைக்கப்பட்டு வரும் ஆலயங்களுக்கு நிதி ஒதுக்கீடு

R.Maheshwary   / 2022 ஜனவரி 05 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாணத்தில் புனரமைக்கப்பட்டு வரும் ஆலயங்களுக்கு, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, பண்டாரவளை, ஹப்புத்தளை, பள்ளெக்கெட்டுவ, வெலிமடை மற்றும் ஊவாபரணகம  ஆகிய இடங்களில் புனரமைக்கப்பட்டு வரும் ஆலயங்களுக்கு, ஆலய நிர்வாக  குழுவினரிடம் புனரமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி  ஒதுக்கீட்டினை இ.தொ.காவின் உப தலைவரும்,பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.

மேலும்  கட்டுமானப் பணியை விரைவுபடுத்த கோவில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது .

எதிர்வரும் காலங்களில் கட்டுமானப் பணிகளுக்காக  மேலதிக நிதி வழங்குவதாக, இக்கலந்துரையாடலின் போது செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X