Editorial / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

சந்திரசேகரன் மக்கள் முன்னணி, ‘புரட்சிகர மக்கள் சக்தி’ என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சந்திரசேகரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் அவருடைய மகள் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் சந்திரசேகரன் மக்கள் முன்னணி 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
நுவரெலியா மாவட்டத்தில் அரசியல் ரீதியாக இன்றுவரை தொடர்ந்து சேவைகளை வழங்கி வந்த இந்த கட்சி இனி புரட்சிகர மக்கள் சக்தி (Revolutionary Peoples Power) என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடர்பில் பின்வருமாரு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் கட்சியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன்
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரன் அவர்களது கொள்கைகளை அரசியல் ரீதியாக கொண்டு செல்லும் நோக்குடனேயே நாம் ஆரம்பித்த புதிய கட்சிக்கு ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ என பெயரிட்டிருந்தோம்.
ஆனாலும் காலப்போக்கில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமன்றி அனைத்து பிரதேசங்களை உள்ளடக்கிய வகையிலும், இன மொழி பேதமின்றி அனைத்து மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் ஓர் அமைப்பாக நாம் மாறவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
இது தொடர்பில் நாம் அதீத கவனம் செலுத்தி கடந்த காலங்களில் எமது பொதுக்குழு கூட்டங்களிலும் கலந்தாலோசித்து மக்கள் நலனை முன்னிறுத்தி நாம் எமது கட்சியின் பெயரை "புரட்சிகர மக்கள் சக்தி என பெயர் மாற்றம் செய்கிறோம் என்பதனை பகிரங்கமாக அறிவிக்கிறோம் என தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago