2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 04 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

Caritas Kandy Setik  நிறுவனத்தின் ஊடாக வறுமையால்  பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவும் வேலைத்திட்டத்தின் மூலம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது.

தலவாக்கலை புனித பத்திரிசிரியார் பங்கு ஆலய மண்டபத்தில் நேற்று (3)  இந்த வழிகாட்டல் செயலமர்வு நடாத்தப்பட்டது.

 இதில், வளவாளர்களாக நுவரெலியா கல்வி வலயத்தின் மேலதிக கல்வி பணிப்பாளர் எஸ்  கணேசராஜா, ஆசிரிய ஆலோசகர் எஸ் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினர்.

 இவ்வேலைத்திட்டம் 2021 ம் ஆண்டு முதல் கண்டி, மாத்தளை, நுவரெலியா,  ஆகிய மாவட்டங்களில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .