2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை நகரில் இருக்கும் பிரபல பாடசாலைக்குள் கஞ்சா சுருட்டை பிடித்த நால்வர் கம்பளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 வெள்ளிக்கிழமை(16) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்   குறித்த பாடசாலையின் இரவு நேர காவல் தொழிலில் ஈடுபடும் காவலாளியின் உதவியுடன் சந்தேகநபர்கள் நால்வரும் பாடசாலைக்குள் இச்செயலில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

 குறித்த பாடசாலை வளாகத்தில் இரவு நேரங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற  ரகசிய தகவலுக்கு அமைய, கம்பளை பொலிஸாரால் பாடசாலை சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை, கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது,  தலா  ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில்  சந்தேகநபர்கள்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .