R.Maheshwary / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை உள்ளிட்ட பல நகரங்களின் வர்த்தக நிலையங்களை உடைத்து, பல இலட்சம் ரூபாய் பணத்தை சேகரித்த நபர் ஒருவர் நேற்று (27) கைதுசெய்யப்பட்டுள்ளார் என மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இரவு நேரங்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை எடுத்துச் சென்று, கொரோனா ஆடையை அணிந்தவாறு வர்த்தக நிலையங்களின் பூட்டுகளை உடைத்து பொருள்கள், பணத்தை திருடி வந்துள்ளார்.
சந்தேகநபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவித்துள்ள பொலிஸார், இவரால் திருடப்பட்ட பொருள்கள் விற்கப்பட்டு, அவற்றில் அதிகமான பணத்தை போதைப் பொருள் பாவனைக்காக செலவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர் மாத்தளை, வத்தேகம, கடுகண்ணாவை, மஹவெல, அலவத்துகொட, இரத்தோட்டை, மெனிக்ஹின்ன உள்ளிட்ட பல இடங்களில் திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேகநபரிடமிருந்து இரும்பால் ஆன ஆயதம் ஒன்று, 165 கிலோவுக்கு மேற்பட்ட மிளகு, பாக்கு உள்ளிட்ட பொருள்களும் ஓட்டோ ஒன்று மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .