Editorial / 2022 மே 23 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது.
உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காவில்லை.
குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல ஆட்டோ ஒன்றைத் தேட ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் கழிந்துவிட்டது. அவர்களின் வீட்டிலிருந்து ஹல்தும்முல்லை வைத்தியசாலைக்கு செல்ல அரைமணிநேரம் தான் பயணிக்க வேண்டும். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று குழந்தை அம்புலன்ஸ் ஊடாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும் இரத்தத்தில் சீனியின் அளவு கடுமையாக குறைவடைந்த காரணத்தினால் குழந்தை இறந்துவிட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆட்டோ ஒன்றைத் தேடிக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒருமணிநேரம் தாமதம் ஏற்படாது போயிருந்தால் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள முடிந்திருக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago