2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்  

மஸ்கெலியா காட்மோர் தோட்டம், லாட்ஜ்வில் பிரிவு மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்துக்கு நீர்வழங்கும் காட்மோர் ஆற்றிலிருந்து, பெண் ஒருவரின் சடலத்தை, மஸ்கெலியா பொலிஸார் நேற்று  மாலை மீட்டுள்ளனர்.

லாட்ஜ்வில் பிரிவைச் சேர்ந்த சங்குப்பிள்ளை பெரியக்கா (வயது 69) என்பவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கியத் தகவலுக்கு அமைவாகவே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X