Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 15 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில், பெரிய வெங்காய விதை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளிடமிருந்து, 7,000 கிலோகிராம் விதை வெங்காயத்தை விலைக்கு பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதென, விவசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாத்தளை பிரதேச செயலகத்தில், நேற்று முன்தினம் (14) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரைத்த அவர், பெரிய வெங்காய விதை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள், அவற்றை விற்பதில் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தவிர்ப்பதற்காகவும்? பெரிய வெங்காய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவுமே, அரசாங்கம் இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதெனக் கூறினார்.
இதேவேளை, விலைக்குப் பெற்றுக்கொள்ளப்படும் விதை வெங்காயத்தின் பெறுமதியில், 50 சதவீதத்தை, மானியம் அடிப்படையில் விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார்.
வரலாற்றில் யாரும் பெற்றுக்கொள்ளாத நிவாரணத்தை, பெரிய வெங்காய விதை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் இம்முறை பெற்றுக்கொள்ளவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓர் ஏக்கர் அளவில் பெரிய வெங்காய உற்பத்தியில் ஈடுபடுவர்களுக்கு, தலா 9,000 ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளதெனவும், அனர்த்தங்களால் பயிர்ச்செய்கை பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, 40,000 ரூபாயைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் கூறினார்.
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago