Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 08 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் தோட்ட நிர்வாகங்கள் செயல்படுகின்றனவா என கேள்வியெழுப்பிய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அப்பாவி தொழிலாளர்களை மிரட்டுவதற்காகவா தொழில் பிணக்குகளை தீர்ப்பதற்கு தோட்ட நிர்வாகம் பொலிஸ் நிலையங்களை நாடுகின்றது என்றும் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (08) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களில் பணியாற்றும் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படுவதன் காரணம் என்னவென வினவிய அவர், ஒன்பது மாத குழந்தைக்கு தாய்ப்பால் தருவதற்கு மலையக தாய்மார்களுக்கு
உரிமையில்லையா என்றும் கேள்வியெழுப்பினார்.
ஹாலி எல ரொசட் தோட்டத்தில் பொலிஸாராலும் முகாமைத்துவ அதிகாரியினாலும் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட கனகரத்தினத்துக்கு நியாயம் பெற்றுத் தரப்பட வேண்டும் எனக் கேட்ட வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட நிர்வாகங்கள் மிகவும் கீழ்த்தரமான, மனிதாபிமானம் மற்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன என்றார்.
மலையக பெருந்தோட்டங்களில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் திருடர்கள், அவர்களுக்கு எதிராக கடுமையாக்கப்பட வேண்டிய சட்டங்கள் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக கையில் எடுக்கப்படுவதை அவர் வன்மையாக கண்டித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படும் வகையிலான சம்பவங்கள் இனிமேலும் நடக்குமாயின், மனித உரிமை ஆணைக்குழு அல்லது ஜெனிவா சென்வேன். .
அங்கு சென்று எமது மலையக மக்களின் உரிமைகளை மீட்டேடுப்பேன் என்று
சவால்விட்ட அவர், பெருந்தோட்ட மலையக மக்கள் தேசிய இனமாக அங்கிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிநின்றார். R
23 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
3 hours ago