2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பெறுபேறுகளில் வீழ்ச்சி

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

இரத்தினபுரி கல்வி வலய தமிழ்மொழி மூலப் பாடசாலையொன்றிலிருந்து, 2017ஆம் ஆண்டு, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய 131 மாணவர்களில் 52 மாணவர்களே சித்தியடைந்துள்ளனரெனச் சுட்டிக்காட்டிய இரத்தினபுரி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சாந்தி எஸ்.விஜயசிங்க, இது பாடசாலையின் 50 சதவீத பெறுபேறு அடைவுமட்டத்தை எடுத்துக்காட்டுவதாகவும் விமர்சித்தார்.

ஒரு மாணவன், பத்து ஆண்டுகள் பாடசாலைக் கல்வியைக் கற்று, பதினொராவது தரத்தில் சித்தியடையவில்லையெனில், அவனது பள்ளி வாழ்க்கை மட்டுமல்ல அவனது எதிர்காலமும் வீணடிக்கப்படுவதாகவே அர்த்தம் என்று கூறிய சாடிய அவர், எனவே, மாணவர்களின் பெறுபேறு அடைவுமட்டத்தில் அதிபர், ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பெல்மதுளை கோட்ட கல்விக் காரியாலயத்தின் கீழியங்கும் பாடசாலை அதிபர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு, பெல்மதுளை தர்மாலோக்க மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில், பணிப்பாளர் ஏ.டபிள்யூ.ஜே.ஏ.பண்டார தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுத் தெரிவித்தார்.

அங்கு தொடாந்து உரையாற்றிய அவர், "ஒரு பாடசாலையில் 50 சதவீதமான மாணவர்கள் மட்டுமே சித்தியடைவார்களாயின், ஏனைய மணவர்களின் எதிர்காலம் என்னாவது? இவர்கள் எத்தகைய தொழிலுக்குச் செல்வார்கள்?" என்று கேள்வியெழுப்பினார்.

“இரத்தினபுரி வலய கல்விப் பணிப்பாளராக நான் பொறுப்பேற்று, சொற்ப காலமே ஆகின்றது. பொதுவாக எமது வலயம், சப்ரகமுவ மாகாணத்தில், இரண்டாம் இடத்திலுள்ளது. அதனை முதலாமிடத்துக்குக் கொண்டு செல்ல அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம். குறிப்பாக தமிழ்ப் பாடசாலைகள், தமது பெறுபேற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X