2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குள் மற்றுமொரு தாக்குதல் சம்பவம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 18 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சிரேஷ்ட மாணவனொருவன் முதலாம் வருட மாணவனைத் தாக்கிய சம்பவம் ஒன்று, நேற்று (17) பதிவாகியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஐய்வர் ஜெனிக்ஸ் விடுதிக்குள் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிரேஷ்ட மாணவன் மதுபோதையில் வந்து, முதலாம் வருட மாணவனைத் தாக்கியதாகவும் இதன்போது காயமடைந்த மாணவன் பேராதனை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான முதலாம் வருட மாணவன் நோட்டன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தாக்குதல் நடத்திய மாணவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் பேராதனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ​பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .