2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பேருந்து தரிப்பிடத்தில் பலநாள் மின் துண்டிப்பு

Editorial   / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 டி.சந்ரு

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் மாதாந்த மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் நுவரெலியா மின்சார சபையின் மூலம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதனால் பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு வரும் பயணிகள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முக்கொடுத்துள்ளனர். தங்களுடைய உடமைகளில் இருக்கும் பெறுமதியான பொருட்கள் களவாடப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மின்சாரம் இன்மையால், பேருந்து தரிப்பிடத்தில் உள்ள வியாபார நிலையங்களுக்கு, நுகர்வோர் வருகையும் குறைந்துள்ளது. இதனால், தங்களுடைய வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பேருந்து நிலையத்தில் இருந்து கொழும்பு ,கண்டி மற்றும் யாழ்ப்பாணம் செல்லும் பேருந்துகள் அனைத்துக்கும் பயணிகளின் வருகை இன்றி இயக்கப்படாமல் நிறுத்தப்படும் சூழ்நிலை உள்ளதாக பேருந்து உரிமையாளர் தெரிவிக்கின்றன.

இதனால் வழக்கமாகப் பயணிகளின் கூட்டத்தால் இரவு முழுவதும் பரபரப்பாக இயங்கி வரும் நுவரெலியா பேருந்து நிலையம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகிறது.

எனவே, பயணிகளின் நலன் கருதியும் , வியாபாரிகளின் நிலைமை கருதியும் பேருந்து உரிமையாளர்களின் நன்மை கருதியும் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்துக்கு சொந்தமான காரியாலயத்தின் மூலம் மின்சார சபைக்கு உரிய பணத்தினை செலுத்தி மின்சாரத்தை மீளவும் பெற்றுக்கொடுக்க வழிசமைக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X