2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொகவந்தலாவையில் ஆலயங்கள் இரண்டு உடைக்கப்பட்டு கொள்ளை

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்,ரஞ்சித் ராஜபக்ஸ

இன்று (27) அதிகாலை  பொகவந்தலாவ  கெம்பியன்  மேற்பிரிவிலுள்ள   ஆலயங்கள் இரண்டு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ  கெம்பியன் மேற்பிரிவு  தோட்டத்திலுள்ள உள்ள முருகன் ஆலயம் ஒன்றும்  அம்மன் ஆலயமொன்றுமே இவ்வாறு உடைக்கப்பட்டு, அவ்வாலயங்களிலிருந்த தங்க நகைகள், உண்டியல்களிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

 இந்த சம்பவம் தொடர்பில்  பொகவந்தலாவை பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணகளை ஆரம்பித்துள்ள நிலையில், இதுவரையிலும் சந்தேகநபர் எவரும் கைது கைதுசெய்யப்படவில்லை.

இதேவேளை குறித்த அம்மன் ஆலயமானது இதற்கு முன்னர் 3 தடவைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X