2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பொடி மெனிக்கேயில் மோதி ஒரு பிள்ளையின் தந்தை பலி

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்,எஸ்.கணேசன்

பொடி மெனிக்கே ரயிலில் மோதி ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்த்தர் ஒருவர். உயிரிழந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் இன்று (15) திகதி  பகல் கொட்டகலைக்கும் தலவாகலைக்கும் இடையில் சென்கிளையார் பகுதியில் இடம்பெற்றுள்ளது,

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி இன்​று (15)  காலை புறப்பட்டு வந்த ரயிலிலேயே,  குறித்த நபர் மோதுண்டுள்ளதாகவும், இவரது சடலத்தை கொட்டகலை ரயில் நிலையத்தில் ஒப்படைத்து ரயில்  புறப்பட்டு சென்றதாகவும் ரயில் நிலைய உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்   கொட்டகலை என்ரூ தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ராமகிருஷ்ணன் மோகனசுந்தரம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன் கொழும்பு சென்றிருந்த நிலையில்,  நாளை ஊருக்கு வருவதாக மனைவியிடம் தெரிவித்ததாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

 அதனை தொடர்ந்து நேற்று  தனது சகோதரர் ஒருவரிடம் தொலைபேசியில் அழைத்து,  குடும்ப தகராறு காரணமாக தான் ரயிலில்  பாய்ந்து தற்கொலை செய்வதாக தெரிவித்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

சடலம் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X