2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பொது போக்குவரத்து தொடர்பில் மக்கள் கோரிக்கை

Janu   / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை -  மட்டுக்கலை வீதியில்  முறையான பொது போக்குவரத்து சேவை இடம்பெறாததன் காரணமாக அப்பகுதியில் வாழும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரியவந்துள்ளது 

தலவாக்கலை -  மட்டுக்கலை மற்றும் தலவாக்கலை - T . R. I . வீதிகளில் தளா 5  தனியார் பேருந்துகள் வீதம் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், லென்தோமஸ் தோட்ட பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் தினமும் கால்நடையாகவே செல்ல வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளதாக  அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் கடந்த 30 வருடத்திற்கு மேலாக குறித்த தோட்டத்திற்கு செல்லும் மக்கள் மட்டுக்களை கூட்டுறவு சங்க கடை அருகிலிருந்து சுமார் 250 மீற்றர் தூரம் மாத்திரமே கால்நடையாக பயணித்துள்ளனர் ஆனால் இன்று ஒரு கிலோமீற்றருக்கு மேல் கால்நடையாக செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதற்கு ஒரு சில தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளே காரணம் என்றும் குறித்த வீதியில் பயணிக்கும் அனைத்து பஸ்களும் தோட்டத்தின் "செமட்ரி" வரை சென்று பின்னர் மட்டுக்கலை மற்றும் T.R.I  வரை பயணிப்பதாகவும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த பஸ்கள் கூட்டுறவு கடை வரை செல்வதில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தலவாக்கலை பேருந்து நிலையத்தில் பணியாற்றும் நேர கணிப்பாளர் நுவரெலியா  மாவட்ட மற்றும் மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான தனியார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கும் எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் அலட்சியத்துடன் இருந்து வருவதாக தெரியவந்துள்ளது .

அத்தோடு 10 பஸ்கள் இமார்க்கத்தில் பயணித்து வரும் நிலையிலும் கூட 1  மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் வீதமே சேவையில் ஈடுபடுவதாகவும் இதனால் நீண்ட நேரம் போக்குவரத்திற்காக வீதியில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும்  அதேபோல் தேசிய போக்குவரத்து ஆணை குழுவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டணத்திற்கு அதிகமான தொகையை இந்த தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக அரவிட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர் .

இலங்கை போக்குவரத்து சபையில் ஹட்டன்  டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று கடந்த சில வருடங்களுக்கு முன் சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் அதனையும் ஒரு சில தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பிரதேசத்தின் முன்னாள் அரசியல்வாதிகளின்  தலையீட்டினால் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .

மத்திய மாகாண போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதியை பெற்று சேவையில் ஈடுபட்டு வரும் 10 தனியார் பஸ்களும் தமது சேவையை தடையின்றி உரிய முறையில் பிரதேச மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையெனில் கடந்த பல வருடங்களுக்கு முன் இப்பிரதேசத்தில் சேவையில் ஈடுபட்ட சிறிய வாகனங்களை (Van) மீண்டும் போக்குவரத்திற்கு பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் . 

கெளசல்யா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X