Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கணேசன்
பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பட்டாசு கொளுத்தி பெரும் ஆரவாரத்தில் ஈடுபட்ட மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு நுவரெலியா மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, நுவரெலியா மாவட்ட செயலகத்தின் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி ரத்னாயக்க உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
கட்டு பணம் செலுத்திய பிறகு மொட்டு கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தேர்தல் அலுவலக வளாகத்தில் பட்டாசுகளை கொளுத்தி, கோஷங்களை எழுப்பி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது எனவும், முதியோர்கள், சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார் ஆகியோர் பட்டாசு சத்தத்தால் பாதிக்கப்பட்டனர் எனவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
அதேபோல இதனால் சுழலுக்கும் மாசு ஏற்பட்டுள்ளது. பட்டாசு கொளுத்திய பின்னர் அப்பகுதியில் சிதறிக்கிடக்கும் கழிவுகளை யார் அகற்றுவது எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். R
40 minute ago
44 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
8 hours ago