Editorial / 2020 மே 19 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு எனத் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் ,இனவாதத்தை தூண்டவோ, போராட்டங்களை உருவாக்குவதற்கோ விரும்பவில்லை. மாறாக எங்களை சீண்டிப் பார்க்க நினைத்தால் யாராக இருந்தாலும் விரட்டியடிக்காமல் விடமாட்டோம் எனத் தெரிவித்தார்.
ஹாலி எல- உனுகலைப் பெருந்தோட்டத்தின் தேயிலைக் காணிகள் நேற்று (18) கிராமவாசிகள் சிலர் அபகரிக்க முயற்சியினை மேற்கொண்டதால், குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவர், அங்கு ஏற்பட்டிருந்த நிலையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள காணிகளை அத்துமீறி கைப்பற்ற முற்பட்டு, அப்பாவி பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதலும் மேற்கொண்டிருந்தனர் .அவ்வாறானதொரு கேவலமிக்க செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்ற இனவாதக் கும்பல்களே மீண்டும் மீண்டும் எமது சிறுபான்மை மக்களின் வழியில் தலையீடு செய்கின்றனர்.
அவர்கள் யாராயினும் எந்த அரசியல் கைகூலியினராயினும் என்னுடைய பிடியிலிருந்து தப்பிக்க இயலாது. தன்னுடைய இறுதி மூச்சுள்ள வரை பெருந்தோட்ட உறவுகளுக்காய் காவலனாய் காத்து நிற்பேன்.பெருந்தோட்டப் பகுதியிலுள்ள சிறுபான்மை மக்களின் காணியிலிருந்த ஒரு பிடி மண்ணையேனும் வெளியார் அபகரிக்க இடமளிக்க மாட்டேன். என்றார்.
மேலும் இப் பிரச்சினைக்கு தீர்வாக மல்வத்துவெளி தோட்டக்கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, குறித்த பெருந்தோட்டக் காணியை இளைஞர்கள் தங்களின் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தீர்வினையும் அவர் வழங்கி வைத்தார்.
31 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
55 minute ago