2025 மே 16, வெள்ளிக்கிழமை

பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பியவர் மரணம்

R.Maheshwary   / 2023 ஜனவரி 02 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், பொலிஸார் அவரைக் கைதுசெய்ய சென்ற போது, வீட்டின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கம்பளை- போதலாபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதென கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேல் மாடியிலிருந்து விழுந்த இளைஞன் படுகாயமடைந்து கம்பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .