Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்ட தோட்டப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில், கடந்த ஒருமாத காலமாக, தற்காலிகமாக இயங்கி வந்த பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகள், இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது.
பொலிமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைவாக, பிரஜாபொலிஸ் திட்டத்தின் கீழ், இந்த தற்காலிக பொலிஸ் நிலையங்கள், ஒருமாத காலத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டு இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ், நுவரெலியா மாவட்டத்தில் டயகம, அக்கரப்பத்தனை,
லிந்துலை, கந்தப்பளை, சாந்திப்புரம், ஹட்டன், பத்தனை ஆகிய பகுதிகளில் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நடமாடும் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டன.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவையின் இறுதிநாள் நிகழ்வு, சென் கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலைய விளையாட்டு அரங்கில், இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், மேளக்கச்சேரி, கலை, கௌரவிப்பு மற்றும், பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளன.
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago