2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

R.Maheshwary   / 2022 மே 16 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

தியகலை- நோட்டன் வீதியின்  டெப்லோ என்ற இடத்தில் நேற்று(15) கற்பாறையொன்று வீதியின் குறுக்கே விழுந்தமையால் தடைப்பட்டிருந்த குறித்த வீதியுடனான போக்குவரத்து தற்போது  வழமைக்கு திரும்பியுள்ளது.

மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று தியகலை- நோட்டன் வீதியின்  டெப்லோ பகுதியில்,  வீதியின் குறுக்கே கற்பாறை சரிந்து விழுந்ததால் அப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

எனினும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களால் வீதியின் பணிகள் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் இதன்போது மின்சார கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட  சேதம் இதுவரை சீர் செய்யப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X