2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

R.Maheshwary   / 2022 நவம்பர் 21 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

பதுளை பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து, போதைப் பொருள் விநியோகிப்பவர்கள் என்ற சந்தேகத்தில் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 90 போதை மாத்திரைகளும் பதுளை பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளன.

பதுளை பொலிஸ் பிரிவின் புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவருக்கு கிடைத்த தகவலுக்கமைய, பதுளை- விகாரைகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் இருவரும் சிக்கியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பதுளை- வினீதகம பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 27 வயதானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .