2025 மே 15, வியாழக்கிழமை

போதை மாத்திரைகளுடன் வைத்தியர் சிக்கினார்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் பசறை விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் கைது செய்யப்பட்டார்.

பதுளை பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் குறித்த வைத்தியர், தனது காரில்  போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, சந்தேகநபரான வைத்தியரின் கார் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது காரிலிருந்து  145 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 44 வயதுடைய வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் மிக நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வு  தகவல் கிடைக்கப்பெற்றதாக  தெரிவித்தனர்.

சந்தேக நபரும் ம் போதை மாத்திரைகளும் பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இன்றைய தினம் (15/02) சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் பதுளை- மயிலகஸ்தன்னை பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .