R.Maheshwary / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளை - தல்தென பிரதேசத்திலுள்ள போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், அதிகமாக போதைப் பொருள் பயன்படுத்தியதன் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மிகவும் மோசமான முறையில் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் , 3 தினங்களுக்கு முன்னர் குறித்த மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதன் பின்னரே அவர் திடீர் நோய்வாய்ப்பட்டு பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு- கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சி்றைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவிடம் வினவியபோது, தற்போது போதைப் பொருளுக்கு இள வயதினர் அடிமையாவது அதிகரித்துள்ளதாகவும் இவ்வாறு அதிகமாக போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் திடீரென்று அதனை நிறுத்திவிட்டால் வேறு ஏதாவது நோய் அறிகுறிகள் ஏற்படும் என்றார்.
இதற்கமைய குறித்த இளைஞனும் போதைப் பொருள் பாவனையை 3 நாள்கள் நிறுத்தியதன் விளைவே, இவ்வாறு திடீர் நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார் என்றார்.
21 minute ago
30 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
36 minute ago
42 minute ago