2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைது

R.Maheshwary   / 2022 ஜூன் 06 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நாவலப்பிட்டி நகரில் மிக நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸார்,  கம்பளை பொலிஸார் மற்றும்  கம்பளை போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதில் பிரதான சந்தேகநபர் ஒருவரும் ஏனைய 11 பேரும் போதை விற்பனை பிரதிநிதிகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை கைது செய்தபோது, அவர்களிடமிருந்து 2880 மில்லிகிராம் ஹெரோய்ன், 560 மில்லிகிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29- 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் நாவலப்பிட்டி, ஓவிட்ட, ஆகரஓயா, ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேநபர்கள் நேற்றைய தினம் (5) நாவலப்பிட்டி பதில் நீதவான் சுனெத்ரா கொட்டவலகெதர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X