2025 ஜூலை 17, வியாழக்கிழமை

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை நகர் மற்றும் தோட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றவளைப்பின்போது, போதைப் பொருட்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை கீனகெல தோட்டத்தில், கசிப்புடன் 36 வயது நபரை கைதுசெய்துள்ள பொலிஸார், அவரிடமிருந்து 750 மில்லிலீற்றர் கசிப்பையும், கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி நபர் நீண்டகாலமாக தனது வீட்டில் கசிப்பு காய்ச்சி வருவதாக, கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மேற்படி வீட்டில் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்ட பொலிஸார் கசிப்புடன் குறித்த நபர் கைதுசெய்துள்ளனர்.

மேலும், கஞ்சா வைத்திருந்தக் குற்றச்சாட்டின் பேரில், பதுளை நகரைச் சேர்ந்த ஒருவரை (வயது 30) பதுளை நகரில் வைத்து பொலிஸார் புதன்கிழமை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து 2 கிராம் ஆயிரம் மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

“மாவா” என்றழைக்கப்படும் போதை கலந்த பாக்கை தன்வசம் வைத்திருந்தக் குற்றச்சாட்டின் பேரில், வத்தேகமையைச் சேர்ந்த ஒருவரை (40), பதுளை, தெலபெத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் புதன்கிழமை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 50 கிராம் பாக்கையும் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபரை விசாரணைக்கு உட்படுத்தியபோதே, அவரிடம் மாவா பாக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X