2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள்களுடன் 18 இளைஞர்கள் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு வகையான போ​தைப்பொருள்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்ட 18 இளைஞர்கள் தியகல பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹட்டன் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் பயணித்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சோதனையிடப்பட்ட போது, இவர்களிடமிருந்து கஞ்சா, ஹெரோயின் உள்ளிட்ட போதைப் ​பொருள்கள் காணப்பட்டதாக ​பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .