2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

போதையில் மனைவியின் பற்களை கழற்றிய கணவன்

R.Maheshwary   / 2023 ஜனவரி 01 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

​மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூப்பன்ன- வெலிவத்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின் பற்களை அவரது கணவன் கழற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் (29) இரவு மதுபோதையில் வந்த கணவனுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி இறுதியில் பெண்ணின் முகத்தில் கணவன் தாக்கியுள்ளார்.

இதன்போது, அப்பெண்ணின் நான்கு பற்கள் கழன்று விழுந்துள்ளன.

அத்துடன், இத்தாக்குதலில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தாயான குறித்தப் பெண், மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கணவன் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற நபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .