2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போய் சேருவதற்கு வழி தெரியவில்லை

Freelancer   / 2022 நவம்பர் 08 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன், குடாகம பொது மயானமும், அதற்கு செல்லும் வழிகளும் புற்களால் நிரம்பி, வழியே தெரியாமல் மூடப்பட்டுள்ளன. 

அடக்கம் செய்வதற்காக சடலங்களை எடுத்துச் செல்வோர் பல்வேறான ​அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

வெயில் காலங்களில் ஓரளவுக்கு சமாளித்து தட்டுதடுமாறி சென்றுவிடலாம். எனினும், மழை நேரங்களில் பெரும் சிரமங்களுக்கு தாங்கள் முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது என பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பாம்புகள், விசஜந்துகள், அட்டை உள்ளிட்டவையால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று மயானத்துக்குச் சென்றுதிரும்புவோர் தெரிவிக்கின்றனர்.

இந்த மாயானத்துக்கும் அதற்குச் செல்லும் வழிகளும் பலவருடங்களாக இவ்வாறு புல், பூண்டுகள் முளைத்து காணப்படுகின்றன என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .