2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மாணவனை நன்நடத்தை முகாமில் விடுமாறு உத்தரவு

Kogilavani   / 2017 மார்ச் 30 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

மதுபோதையிலிருந்த நிலையில் கைதான 16 வயது மாணவனை, எதிர்வரும் 5 ஆம் திகதிவரை, பதுளை நன்னடத்தை முகாமில் தடுத்து வைக்குமாறு, பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் ருவந்திகா மாரசிங்க, பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, இம்மாணவனை எதிர்வரும் 5 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.            

பசறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில், தரம் 10இல் கல்விப் பயின்றுவரும் மேற்படி மாணவன், மது அருந்திய நிலையில், பசறை பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

இவர் மதுவுக்கு அடிமையானவரென்றும், வீட்டிலுள்ள பொருட்களை விற்று மது அருந்துவதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி மாணவனை, புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .