Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாலித ஆரியவங்ச
எல்ல பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 9இல் கல்வி கற்றுவரும் மாணவனை, துஷ்பிரயோகத்துக்கு உட்டுபத்தினார் என்ற குற்றச்சாட்டில், அப்பாடசாலையின் அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 45 வயதுடைய அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையிலுள்ள களஞ்சியசாலையில் வைத்தே, மதிய உணவு இடைவேளையில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவரது உறவினர்கள், புதன்கிழமை (02) பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்தே, பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண கல்வித் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, கல்வி அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நேற்று, பாடசாலைக்கு விஜயம் செய்ததாகவும் ஊவா மாகாண கல்வித் திணைக்கள அதிகாரி சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago