R.Maheshwary / 2022 மார்ச் 24 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி. ஷங்கீதன்
அரசாங்கத்தின் சர்வ கட்சி மாநாட்டில் மலையக மக்கள் முன்னணி கலந்து கொண்டதாக வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை என கட்சியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜய சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.
தற்பொழுது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த சர்வ கட்சி மாநாட்டில் மலையாக மக்கள் முன்னணி கலந்து கொள்ள வில்லை.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் ஏகமனதாக எடுத்த தீர்மானத்திற்கு அமையவே இந்த சர்வ கட்சி மாநாட்டில் மலையக மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை.
ஆனால் இன்று சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மலையக மக்கள் முன்னணி கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன இந்த செய்திகளில் எந்தவிதமான உண்மை தன்மையும் இல்லை என்பதை கட்சியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஆனால் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு சிலர் எங்களுடைய கட்சியின் பெயரை பயன்படுத்தி இருப்பார்கள் ஆக இருந்தால் அது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் காரணமாக இன்று இந்த பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை தள்ளப்பட்டு இருக்கிறது.
இவ்வாறான ஒரு நிலையில் நாங்கள் இந்த சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில் எந்த விதமான நன்மையும் இல்லை.
கட்சியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்சிக்கு முரணான வகையில் செயல்பட்டவர்கள் தொடர்பாக கட்சி தீர்மானத்திற்கு அமைய எடுக்கப்பட்ட முடிவுகளின் படி வெளியேற்றப்பட்டவர்கள் எங்களுடைய பெயர்களை பயன்படுத்துவார்களாக இருந்தால் அது முற்றிலும் தவறானதும் அவர்களுடைய கையாளாகாத தனத்தையுமே அது காட்டுகின்றது.
மலையக மக்கள் முன்னணி என்பது கொள்கைக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் அந்த அமைப்பானது தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய செயற்பட முடியாது.
நாங்கள் எங்களுடைய மக்களின் நலன் கருதியும அவர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டும் அதற்கு அமையவே நாங்கள் செயல்படுகின்றோம்.
எனவே, மலையக மக்கள் முன்னணியின் பெயரை தவறாக யாரும் பயன்படுத்துவார்களாக இருந்தால் அதனை நான் வன்மையாக கண்டிப்பதுடன் எதிர்காலத்தில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் கட்சி என்ற வகையில் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.
மலையக மக்கள் முன்னணி உருவாக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை அது சரியான பாதையில் கட்சியின் கொள்கைகளுக்கு அமைய பயணித்துக் கொண்டிருக்கின்றது.
எனவே, நாங்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு மக்களை காட்டிக் கொடுக்க தயாராக இல்லை.
நாங்கள் மக்கள் என்ன எங்களுக்கு ஆணை கொடுத்திருக்கின்றார்களோ அதன் வலி செல்வதற்கு மலையக மக்கள் முன்னணி என்றும் முன்னிற்கும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026