2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

காதலை நிறுத்த கூறி தந்தை மீது தாக்குதல்

Janu   / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தனது மகனுடனான காதலை நிறுத்துமாறு கூறி 66 வயதுடைய நபரை கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் திங்கட்கிழமை (13) அன்று இடம்பெற்றுள்ளது.பிபில, ரதுபஸ்கெட்டிய, கல்கேலந்த வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. 

தாக்குதலுக்குள்ளான நபரின் மகள், சந்தேக நபரின் மகனுடன் காதல் உறவில் இருந்த நிலையில் அதை நிறுத்துமாறு சந்தேக நபர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்து கூறியுள்ளார்.

இதன்போது பெண்ணின் தாய் தந்தை வீட்டில் இருந்துள்ளதுடன் “அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என தந்தை கூறியுள்ளார் பின்னர், சுமார் அரை மணி நேரம் கழித்து, சந்தேக நபர்  கத்தியை எடுத்து வந்து பெண்ணின் தந்தையை தாக்கியுள்ளதுடன் இதனால்  அவரது கையின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த நபர், அவரது மனைவி மற்றும் பிரதேசவாசிகளால் சுவசெரிய ஆம்புலன்ஸ் மூலம் பிபில அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் ,  பிபில பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .