2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மகளிர் கல்லூரியின் 3 மாடிக் கட்டடத்துக்கு பெரும் ஆபத்து

R.Maheshwary   / 2022 நவம்பர் 14 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை  காரணமாக, கண்டி- புனித அந்தோனியார் மகளிர் கல்லூரியின் மூன்று மாடிக் கட்டடத்தின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளதுடன், இதனால் கட்டடம் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தரம் 9, 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகள் காணப்படும் குறித்த கட்டடத்திலிருந்து மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் ​இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த மாணவர்களுக்கு வேறு மாற்று வகுப்பறைகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனினும், குறித்த கட்டடத்துக்கு புதிதாக பாதுகாப்பு சுவர் ஒன்றை அமைத்து, மீண்டும் அங்கு கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவிவியல் பிரிவின் சிரேஸ்ட பேராசிரியர்  அதுல சேனாரத்னவிடம் வினவியபோது,  இக்கட்டடத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்னர், அங்கே பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .