Yuganthini / 2017 ஜூன் 18 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
“பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும் அதனை உலகறியச் செய்வதற்கும், கிராமங்கள் தோறும் மகளீர் சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும்” என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு வலியுறுத்தியுள்ளார்.
நோர்வூட் மைதானத்தில் நடைபெற்ற, மகளீர் சங்க நிர்வாகிகளுடனான சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர், “கிராமங்கள், மலையகப் பெண்கள் செறிந்துவாழும் பெருந்தோட்டங்களில், மகளீர் சங்கங்கள் அமைக்கப்படுவது, தற்கால சூழலில் இன்றியமையாத ஒன்றாகும்.
மலையகப் பெண்கள், தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தாங்கள் வாழும் சமூகத்தினூடாகவும் பிற இன்னோரன்ன செயற்பாடுகளின் ஊடாகவும் தங்களது உரிமைசார்ந்த விடயங்களுக்காகவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ஒரு சிலர், பாலியல் வன்புணர்வு, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போது, அவற்றைமூடி மறைத்து வாழ்வதற்கே பழகிக் கொண்டனர்.
இதனை தமக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ளும் நயவஞ்சகர் கூட்டம், தொடர்ந்து பெண்களை பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருகின்றது.
இவ்வாறான விடயங்களை, வெளியுலகுக்கு கொண்டுச்செல்லவும் இவற்றை தடுத்து நிறுத்தவும், தோட்டங்கள், கிராமங்கள் தோறும் மகளீர் அமைப்புகள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்” என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .