2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மகாவலி ஆற்றிலிருந்து சடலம் மீட்பு

R.Maheshwary   / 2022 நவம்பர் 17 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டை -ஹல்லொலுவ பிரதேசத்திற்கு அருகிலுள்ள  மஹாவலி ஆற்றில்  சடலமொன்று மிதந்த நிலையில் இன்று (17) திகதி காலை மீட்கப்பட்டுள்ளது.

மஹாவலி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அதை வெளியே இழுத்து கயிற்றால் கட்டிய பின் பொலிஸாருக்கு  அறிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்  40-50 வயதுக்கு இடைப்பட்டவர் மற்றும் மஞ்சள் மற்றும் கருப்பு நிற சட்டை, வெள்ளை பனியன், கருப்பு பேண்ட் மற்றும் காலணிகள் அணிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவர் ஏதோ ஒரு விழாவில் கலந்து கொண்டதற்கான அடையாளம்  காணப்படுவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், ​சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .