R.Maheshwary / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
கட்டட பொருள்கள் விற்பனை நிலையம் மூலம் மகாவலி கங்கையில் முதலைகளின் பெருக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கண்டி- குடாரவத்த மாவத்தையில் நடத்திச் செல்லப்படும் கட்டட பொருள்கள் விற்பனை நிலையத்துக்கு, வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் மணல்கள் மூலம் முதலைக் குட்டிகள் வருவதாகவும் இதனால் மகாவலி கங்கையில் முதலைகளின் பெருக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய குறித்த வர்த்தக நிலையத்துக்கு இதற்கு முன்னர், திருகோணமலை- கந்தளாய் பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மணலுடன், சில முதலைக் குட்டிகள் காணப்பட்ட நிலையில், மீண்டும் நேற்று (27) அவ்வாறே சில முதலைக் குட்டிகள் மணலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட முதலைக் குட்டிகள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வர்த்தக நிலையத்தக்கு அருகில் உள்ள கால்வாய் ஒன்றில் முதலையொன்றும் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ள நிலையில், அதனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
எனவே அந்த கால்வாயின் நீர் மகாவலி கங்கையை சென்றடைவதால், முதலை மகாவலி கங்கைக்குச் சென்றிருக்கலாம் என்றும் பிரதேசவாசிகள்அச்சம் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .