2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

‘மக்களை பாதுகாப்பதற்கு தனி கட்சி உருவாகவில்லை’

Editorial   / 2020 ஜூலை 26 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள், தேர்தல் காலத்தில் மாத்திரம்  தேடப்படும் சமூகமாக காணப்படுகின்றனரென, புரட்சித் தமிழர் பேரவையின், சுயேச்சை குழு 2 இல் போட்டியிடும் சட்டத்தரணி மா. சிறில்ராஜ் தெரிவித்தார்.

பசறை பிரதேசத்தில்,  மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், பதுளை மாவட்ட மக்கள், வாக்குகளைப் பெற்றுக்கொள்ள மாத்திமே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.  தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும்  மக்களை பாதுகாப்பதற்கும் தனி கட்சி ஒன்று உருவாகவில்லை, தொழிற்சங்கத்தின் ஊடக  தமது அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனால், தொழில்சார் நடவடிக்கைகளில் சுதந்திரமாக நடந்துகொள்ள முடியாமல் மக்கள் உள்ளதுடன், தொழிற்சங்கங்கள்  பாரிய அழுத்தங்களை கொடுத்துவருவதை பார்க்க கூடியதாக உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

அடிமைத்தனம் இல்லாது சுதந்திரமாக வாழ்வதற்கு புரட்சித் தமிழர் பேரவை முழு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் என்றுரைத்த அவர்,  எம்முடன்  நம்பிக்கையோடு கைகோர்க்குமாறு, கோரிகை விடுத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .