Kogilavani / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாட்டு முகவர் நிலையத்துக்கூடாக சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாகச் சென்ற தனது மனைவி குறித்து, இதுவரை எவ்வித தகவல்களும் இல்லையென்றும் மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு கோரியும் கம்பளை, வெலிஓயாவைச் சேர்ந்த நபரொருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான, சுஷாந்த குமாரி என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் வெளிநாட்டு பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். பின்னர், தான் சென்ற வீடு சரியில்லை என்றும் அந்த வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்து விட்டதாகவும் அவர் தனது கணவருக்கு அலைபேசியின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
அவ் அழைப்பின் பின்னர், தனது மனைவியிடமிருந்து எவ்வித தகவல்களும் இல்லையென அப்பெண்ணின் கணவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 50 க்கும் மேற்பட்ட தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆனால், அவர்கள் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யாது அலைக்கழித்து வருவதாகவும் அந்நபர் கூறியுள்ளார். ஆனால், இவர் தனது மனைவி குறித்து இதுவரை பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .