2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மண்சரிவால் லுணுகல- மட்டக்களப்பு பிரதான வீதிக்கு பூட்டு

R.Maheshwary   / 2022 நவம்பர் 14 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா, ஆ. புவியரசன்     

லுணுகல பகுதியில் இன்று (14)  இடம்பெற்ற பாரிய மண் சரிவினையடுத்து, லுணுகல - மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.

இன்று (14) காலை  பெய்த கடும் மழையினைத் தொடர்ந்து,  மண்மேடு பிரதான பாதையில் சரிந்துள்ளது.

இந்த மண்மேட்டை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு தினங்களுக்கு அவ்வீதி  வழியான வாகன போக்குவரத்துக்களுக்கு தடை ஏற்படலாம் என்றும்  எனவே, மாற்று வழிப்பாதைகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், எல்ல - வெள்ளவாயா பிரதான வீதியில் பாரிய மரங்கள் மற்றும் கற்பாறைகள் சரிந்திருப்பதனால், அவ் வழியுடனான  போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.

அத்துடன்  எல்ல முதல் இதல்கஸ்ஹின்ன, ஒஹிய பகுதியின் ரயில் பாதைகளில் மணிசரிவு இடம்பெற்றுள்ளதால் ரயில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழையால் ஊவா மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர்களுக்கு ஏற்பட்டுள்ள  பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் படி கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், பதுளை மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .